வரலாற்று நிகழ்வுகள் Today History : 22.03.2021
முக்கிய நிகழ்வுகள் :- 1868ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இயற்பியல் துறை ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலம் மோரிசன் நகரில் பிறந்தார். 1993ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் சிப்-ஐ (chip (80586)) அறிமுகம் செய்தது. 2005ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி தமிழ்த் திரையுலகில் காதல் மன்னன் என்று அழைக்கப்படும் ஜெமினி கணேசன் மறைந்தார். முக்கிய தினம் :- உலக தண்ணீர் தினம் நீரின்றி அமையாது உலகு என்பதற்கு ஏற்ப, நீரின்றி நம்மால் வாழ இயலாது. பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 1993ஆம் ஆண்டு முதல் மார்ச் 22ஆம் தேதி உலக தண்ணீர் தினமாக ஐநாவால் அறிவிக்கப்பட்டு இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு கொண்டாடி வருகிறோம். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல கோடி மக்கள் தண்ணீரின்றி திண்டாடி வர...