யாருக்கு எந்த தொகுதி? அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இதோ!
- ஆறு பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் ரெடி
- அதிமுக தலைமை இன்று பிற்பகலில் வெளியிட்டுள்ளது
- விரைவில் அடுத்தகட்ட பட்டியல் வெளியாக இருக்கிறது
- தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் அடுத்த வாரம் தொடங்குகிறது. எனவே அதற்குள் தொகுதி பங்கீடு, தொகுதிகள் தேர்வு, வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்ட விஷயங்களை இறுதி செய்ய வேண்டியுள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். அதிமுகவைப் பொறுத்தவரை கூட்டணியை உறுதி செய்யும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பாமகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பாஜக உடன் கூட்டணி உடன்படிக்கையை விரைவில் கையெழுத்திடவுள்ளனர்.
அக்கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம் தொகுதி பங்கீட்டிற்கு உடன்படாமல் தேமுதிக இழுபறி காட்டி வருகிறது. தங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என்று கேட்பதால் அதிமுக குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. - * போடிநாயக்கனூர் (200) - ஓ.பன்னீர்செல்வம்
* எடப்பாடி (86) - எடப்பாடி பழனிசாமி
* ராயபுரம் (17) - ஜெயக்குமார்- * விழுப்புரம் (74) - சி.வி.சண்முகம்
* ஸ்ரீவைகுண்டம் (216) - எஸ்.பி.சண்முகநாதன்
* நிலக்கோட்டை(தனி) (130) - எஸ்.தேன்மொழி
ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட ஆறு பேரும் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்களோ, அதே தொகுதி மீண்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து படிப்படியாக பிற தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment