மருத்துவக் குறிப்புகள் -முன்னுரை
உலகம் என்னும் ஒட்டு மொத்த மாளிகைக்கும் பூஜை அறையாக இருப்பது நமது பாரத தேசம் தான். அதனால் தான் மற்ற நாடுகளில் உள்ள பெண்கள் பெரும்பாலும் மகன்களைப் பெற, நமது பாரதப் பெண்கள் மட்டும் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு மகான்களையே மகன்களாகப் பெற்று வந்து உள்ளனர். பூஜை அறையை நோக்கித் தானே இறை அடியவர்கள் வருவார்கள்? அந்த வகையில் நமது பாரத தேசத்தை நோக்கி வந்து பிறப்பெடுத்த செம்மல்கள் தான் மகான்களும், சித்தர்களும்.
மேலும், அப்பேற்பட்ட அந்த சித்தர்கள் அருளிய காய கல்ப மூலிகைகளின் கட்டுரை தொகுப்பு தான் இது. "தேரையர் காயகல்பம், 'போகர் காயகல்பம்', கோரக்கர் காயகல்பம்' ஆகிய இவைகளில் இருந்து தான் இந்தப் படைப்பை நாங்கள் எடுத்து இயம்பி உள்ளோம். இன்னும் சொல்லப் போனால் இது எங்களது படைப்பு அல்ல, சித்த புருஷர்களின் படைப்பை நாங்கள் எல்லோருக்கும் பயன் பெரும் விதத்தில் டிஜிட்டல் படைப்பில் உங்கள் கைப்பேசியில் கொண்டு வந்து தந்துள்ளோம். அவ்வளவு தான்.
அது சரி யார் இந்த சித்தர்கள்?
சித்தர்கள்! இவர்கள் கற்கால விஞ்ஞானிகள். இன்று வரையில் அனைவருக்கும் புரியாத புதிராக விளங்கும் உத்தமர்கள். எல்லாக் கேள்விகளுக்கும் விடை தெரிந்த மகாத்மாக்கள். இறைவனுக்கு அடுத்த படியில் இருப்பவர்கள். இறைவனாக வணங்கப் படுபவர்கள். எல்லா உயிர்களையும் ஒன்றாக பாவிக்கும் நல் மனம் படைத்தவர்கள். இவர்கள் எண்ணிக்கை மொத்தம் பதினெட்டு என்று அறியப்படுகிறது.
நமது தமிழகத்தின் இயற்கை விஞ்ஞானிகளான இந்த சித்தர்கள் வஜ்ரதேகம் பெற பல வழிகளைக் கண்டு பிடித்துத் தாமே அவற்றை அனுபவித்து பல நூற்றாண்டுகள் வாழ்ந்த பின் அவற்றின் வழி முறைகளை பின்னால் வரும் சந்ததிகளும் தெரிந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று விரும்பினர். அதனால் 'காயகல்ப மூலிகைகள்' எனும் தலைப்பில் பல பாடல்களில் பல மருந்து முறைகளை கூறியுள்ளனர். அவற்றைத் தான் நாங்கள் எளிய வடிவில் கட்டுரையாகத் தந்து உள்ளோம்.
'காய கல்பம்' என்றால் என்ன?
'காயம்' என்றால் உடம்பு, 'கல்பம்' என்றால் 'கல்' போன்று இறுக வைப்பது. அதாவது அழியாத தன்மை வாய்ந்த பொருள் என்று அர்த்தம். மனித உடலை சில காய கல்ப மூலிகைகளை சாப்பிடுவதன் மூலம் இறுக வைத்து எவ்வித நோய்க்கும் எதிர்ப்பைக் காட்டும் வகையில் 'வஜ்ரம்' போல திடமாக அமைத்துக் கொள்ள முடியும். இது தான் சித்த புருஷர்கள் கண்டு அறிந்த முறை.
இந்தியாவில் மட்டும் 8000 வகைகவம், வல்லாரை, முடக்கத்தான், மிளகு, பிரண்டை, நெல்லி, தூதுவளை, துளசி, திப்பிலி, தான்றி, சீந்தில், சிவக்கரந்தை, சதாவரி, கீழாநெல்லி, கறிவேப்பில்லை, கற்றாழை, கருவேலன், கரிசலாங்கண்ணி, கடுக்காய், இஞ்சி, ஆவாரை, ஆல், அரசு, அமுக்கரா, அதிமதுரம், அத்தி ஆகிய இவை அனைத்துமே காய கல்ப மூலிகைகள் தான். இதனை அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தினாலே போதும் நோய்களுக்கு விடை கொடுத்து விடலாம். அதுவும் நிரந்தரமாக.
சரி மேற்கண்ட இந்த மூலிகைகளின் மருத்துவ குணங்களையும், பயன்களையும் விவரமாக இனி வரும் கட்டுரைகளின் வாயிலாகப் பார்ப்போம் வாருங்கள்.ளுக்கும் அதிகமாகவே நோய்களை குணப்படுத்தும் பச்சிலைகளும் மூலிகைகளும் உள்ளன. உதாரணமாக அன்றாடம் விளையும் கீரையையே எடுத்துக் கொள்ளுங்கள். அது எங்கும் காணப்படும் ஒரு சாதாரண தாவரம். எனினும் குறைந்த செலவில் நிறைந்த சத்துக்களை உடலுக்குத் தரும் தாவரம் ஆகும்.
இதே வகையில் வேம்பு, வெந்தயம், வில்வம், வல்லாரை, முடக்கத்தான், மிளகு, பிரண்டை, நெல்லி, தூதுவளை, துளசி, திப்பிலி, தான்றி, சீந்தில், சிவக்கரந்தை, சதாவரி, கீழாநெல்லி, கறிவேப்பில்லை, கற்றாழை, கருவேலன், கரிசலாங்கண்ணி, கடுக்காய், இஞ்சி, ஆவாரை, ஆல், அரசு, அமுக்கரா, அதிமதுரம், அத்தி ஆகிய இவை அனைத்துமே காய கல்ப மூலிகைகள் தான். இதனை அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தினாலே போதும் நோய்களுக்கு விடை கொடுத்து விடலாம். அதுவும் நிரந்தரமாக.
சரி மேற்கண்ட இந்த மூலிகைகளின் மருத்துவ குணங்களையும், பயன்களையும் விவரமாக இனி வரும் கட்டுரைகளின் வாயிலாகப் பார்ப்போம் வாருங்கள்.
Comments
Post a Comment