தலைவர்கள் வரலாறு கு. காமராஜர்

 பெயர் : கு. காமராஜர்                  



இயற்பெயர் : காமாட்சி 


பிறப்பு : 15-07-1903 


இறப்பு : 02-10-1975 


பெற்றோர் : குமாரசாமி, சிவகாமி அம்மையார் 


இடம் : விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா 


வகித்த பதவி : தமிழக முன்னாள் முதல்வர் 


விருதுகள் : பாரத ரத்னா விருது 


வரலாறு:- வாழ்க்கை வரலாறு 


தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், 'பெருந்தலைவர் காமராஜர்'. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் 'பொற்காலமாக' கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். தன்னுடைய உழைப்பால், தொண்டால், படிப்படியாக உயர்ந்த இவர், 'பெரும் தலைவர்', 'தென்னாட்டு காந்தி', 'படிக்காத மேதை', 'கர்ம வீரர்', 'கல்விக்கண் திறந்த காமராஜர்' என பல்வேறு சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார். சமுதாயத்தில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் ஏழைகளுக்கு நல்லது செய்யும் அவரின் தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ஆம் ஆண்டு 'பாரத ரத்னா' விருதினை வழங்கியது. இந்தியாவின் மதிக்கத்தக்க இரண்டு பிரதம மந்திரிகளை உருவாக்கி, இந்தியாவின் 'கிங்மேக்கராகப்' போற்றப்படுபவர் காமராஜர். 


பிறப்பு: 


கு. காமராஜர் அவர்கள், 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள 'விருதுநகரில்' குமாரசாமி நாடாருக்கும் சிவகாமியம்மாவுக்கும் மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காமாட்சி'. அவருடைய தாயார் மிகுந்த நேசத்துடன், அவரை 'ராஜா' என்று அழைப்பார். அதுவே, பின்னர் (காமாட்சி + ராஜா) 'காமராஜர்' என்று பெயர் வரக் காரணமாகவும் அமைந்தது. 


ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி: 



காமராஜர் அவர்கள், தனது ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேயே தொடங்கி, 1908 ஆம் ஆண்டில் 'ஏனாதி நாராயண வித்யா சாலையில்' சேர்க்கப்பட்டார். பின்னர் அடுத்த வருடமே விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான 'சத்ரிய வித்யா சாலா பள்ளியில்' சேர்ந்தார். அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால், அவரின் தாயாரின் நகைகளை விற்றுக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன்னுடைய பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர், தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். 


விடுதலைப் போராட்டத்தில் காமராஜரின் பங்கு: 


டாக்டர் வரதராஜுலு நாயுடு, கல்யாணசுந்தர முதலியார் மற்றும் ஜார்ஜ் ஜோசப் போன்ற தேசத்தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்ட காமராஜர் சுதந்திரப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 'ஹோம் ரூல் இயக்கத்தின்' ஒரு அங்கமாக மாறிய அவர், பல போராட்டங்களிலும் கலந்துகொண்டார். பிறகு, இந்திய நேஷனல் காங்கிரஸில் முழு நேர ஊழியராக, 1920 ஆம் ஆண்டில், தனது 16வது வயதில் சேர்ந்தார். உப்பு சத்யாக்ரஹத்தின் ஒரு பகுதியாக, 1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அடுத்த ஆண்டே, 'காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்' அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார். 


மேலும், 'ஒத்துழையாமை இயக்கம்', 'வைக்கம் சத்தியாக்கிரகம்', 'நாக்பூர் கொடி சத்தியாகிரகம்' போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், 'வாள் சத்தியாக்கிரகத்தைத்' தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார். மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார். 


காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தியுடன் ஏற்பட்ட நல்லுறவு: 


'காங்கிரஸ் தலைவர்', 'இந்திய விடுதலை வீரர்', 'இந்திய அரசியலில் மக்களாட்சி நெறிமுறைகளை ஆழமாக வேரூன்ற செய்தவர்', 'மிகச் சிறந்த பேச்சாளர்' எனப் புகழப்பட்ட சத்தியமூர்த்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார். 1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார். இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே, சத்திய மூர்த்தி அவர்கள் இறந்துவிட்டார், ஆனால் காமராஜர் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, முதலில் சத்திய மூர்த்தி வீட்டிற்குச் சென்று தேசியக்கொடியை ஏற்றினார். அதுமட்டுமல்லாமல், காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன், சத்திய மூர்த்தியின் வீட்டுக்

Comments

Popular posts from this blog

பணத்தை முதலீடு செய்வது எப்படி?

WOMEN WORK FROM HOME JOB

India has high hopes ties with US will deepen under Joe Biden