ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணம் இது தான்...அறிவித்த தமிழக அரசு !!!

 சென்னை : 


சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணம் குறித்த விபரத்தை தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். 

மேலும், அரசு கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்றும், சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இந்தப் பல்கலைக்கழகத்தை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். உயர்கல்வித்துறையின் கீழ் இருந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வரப்படுவதாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது. இதன்மூலம், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாறியுள்ளது.

 விவசாயிகள் சாலை மறியல்... நெடுஞ்சாலையான வயல்வெளிகள்... மக்கள் வேதனை இந்நிலையில், 


சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரிக்கான கல்விக் கட்டணம் குறித்த விபரத்தை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. இதில், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ரூ.13,610 கட்டணம், பி.டி.எஸ் படிப்புக்கு ஓராண்டுக்கு ரூ.11,610 கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு செலுத்திய கட்டணம் திரும்ப தரப்பட மாட்டாது என்றும், இனிமேல் பெறும் கட்டணம் அரசு கட்டணமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

பணத்தை முதலீடு செய்வது எப்படி?

WOMEN WORK FROM HOME JOB

BEST MOTIVATION STORY TODAT ---Srinivasan Ramanujan Biography